மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…!

Arvind Kejriwal: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை சார்பில் கெஜ்ரிவாலுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஒரு முறை கூட அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

READ MORE- இன்று தான் கடைசி… SBIக்கு மீண்டும் கெடு வைத்த உச்சநீதிமன்றம்.!

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு வரும் 12 ஆம் தேதிக்கு மேல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிலளிக்க உள்ளதாக கூறி இருந்தார். இதற்கிடையில் டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு மறுப்பதாக கூறி கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்தது.  இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

READ MORE- இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்..

அதன்படி விசாரணை ஆணையத்தின் சம்மனை புறக்கணித்ததற்காக அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.  டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தது.

READ MORE- குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்! பெயர் என்ன தெரியுமா?

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு நீதிபதி ஜாமின் வழங்கி  உத்தரவு பிறப்பித்தார். மேலும், ரூ.15,000 பிணைதொகை மற்றும் ரூ.1 லட்சத்திற்கான உத்தரவாதம் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

author avatar
murugan

Leave a Comment