வேளாண் திருவிழாவை முன்னிட்டு கோவையில் ரேக்ளா பந்தயம்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன.

கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வாகனங்கள் போட்டியில் பங்கேற்று சீறி பாய்ந்தன. 100 மீட்டர், 200 மீட்டர் தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.