நாளை முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு.!

நாளை முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு.!

Puducherry - eb bill

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் நாளை (ஜூன் 16 ஆம் தேதி) முதல் அம்மாநில அரசால் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்படுகிறது.

ஒரு தகவழிநடப்பி, வீட்டு உபயோக மின் கட்டணம் வரும் நாளை (ஜூன் 16) முதல் 100 யூனிட்டிற்கு ரூ.2.25 முதல் 2.70 வரையும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 முதல் 4 வரை உயர்த்தப்படுகிறது. அதேபோல், 201 முதல் 300 யூனிட் வரை ரூ 5.40 இல் இருந்து 6 உயரவுள்ளது.

301 யூனிட்களுக்கு மேல் 6.80 இருந்து 7.50 ஆக மின்கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் இந்த திடீர் மின் கட்டணம் உயர்வால், சாமானியர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அந்த தகவல் வதந்தி என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube