உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குக – ஓபிஎஸ்

கனமழை பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது.

இதன் விளைவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது சார்பிலும், அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் நிவர்புயல் மற்றும் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் வழங்ப்பட்டியிருந்த நிலையில், ஆனால் தற்போது திமுக ஆட்சியின் போது கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

எனவே, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை, மாநில அரசு குறைந்தபட்சம் 10 லட்சம் (அ) அதற்குமேல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்