ஏப்ரல் 3-ல் ஸ்ரீபெரும்புதூருக்கு வருகிறார் பிரியங்கா காந்தி.!

ஏப்ரல் 3-ம் தேதி தமிழகத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகைத் தருகிறார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் காலம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி தமிழகத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகைத் தருகிறார்.

தமிழகத்திற்க்கு வரும் பிரியங்க காந்தி தனது தந்தை ராஜீவ்  காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிற்பகல் 03:30 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபடயுள்ளார்.