அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் களம் கோர்க்கும் கார்த்தியின் ‘தேவ்’ பட தயாரிப்பு நிறுவனம்!!!

கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி புதிதாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை ரிலயன்ஸ் நிறுவனத்துடன் சேர்த்து ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடுகிறது. இதனை தொடர்ந்து இந்நிறுவனம் ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ‘அடங்கமறு’ பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு ஆகியோரது புதிய படங்களை தயாரிக்க உள்ளனர்.

இந்த படங்களின் நடிக்கபோகும், நடிகர் நடிகைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment