அசாமில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் பிரதமர் மோடி…!!

அசாம் மாநிலத்தில், மக்களவை தேர்தல் பரப்புரையை  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார்.

மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் பிரதமர் மோடி பரப்புரையை  இன்று தொடங்குகிறார். சிலிசார், நெளகான் பகுதிகளில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். மணிப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் துவக்கி  வைக்க இருக்கிறார். அம்மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலில், 7 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment