செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் – தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்ற கிளை..!

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரப்படுத்தபட்டது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. அதனால், பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் மூலம் விளம்பர பலகைகளில் ஒட்டபட்டது.

இந்த நிலையில், செஸ் விளம்பரத்தில், மோடியின் புஹிப்படம் இடம்பெறாதது குறித்து சிவகங்கையை சேர்ந்த  ராஜேஷ் குமார் என்பவர்  உயர்நீதிமன்ற  கிளையில்,பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்  செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செஸ் போட்டியை  தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமை மிக்கது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.

குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் விளம்பரங்களில் புகைப்படம் இடம்பெற்று இருக்கலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அரசு தரப்பில் இன்றைய நாளிதழில் கூட செஸ் ஒலிம்பியார் விளம்பரத்தில் பிரதமரின் படம் வெளியிடப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடியின் படம் பெறாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற மனுதாரரின் கருத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment