புதிய குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர்…!

திரௌபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment