‘கொள்கைக் குன்றாக உருவானவர்’ – திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘திராவிடச் சிறுத்தை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.