காவல் ஆணையர் ராஜீவ்குமாரை விசாரிக்கலாம் கைது செய்யக்கூடாது…உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் C.B.I முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் C.B.I தரப்பில் இரண்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , உச்சநீதிமன்றம் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் , மேற்கு வங்க DGP  மற்றும் மேற்கு வங்க தலைமைச்செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரிக்கலாம், ஆனால் கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment