நீதி கிடைப்பதில் இருக்கும் தாமதம் நம் நாட்டிற்கு பெரும் சவால்.! பிரதமர் மோடி உரை.!

சட்டங்கள் எளிமையான அனைவர்க்கும் புரியும் வண்ணம் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும். நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். – பிரதமர் மோடி உரை.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறும். இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘ டிஜிட்டல் தொழில் நுட்பங்களை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  5 ஜி சேவைகள் மேலும் வலுப்படுத்தும். சட்டங்கள் எளிமையான அனைவர்க்கும் புரியும் வண்ணம் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும். நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். நீதி கிடைப்பதில் இருக்கும் தாமதம், நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று.’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத்தில் மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கபட்டது. இதில் சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பகலில் நீதிமன்றங்கள் மீதான சுமை குறைகிறது. சமூக சட்டங்கள் காலாவதியாகி உள்ளதால் அவை முன்னேற்றத்துக்கு தடைகளாக இருக்கிறது  என்பதை நாம் உணர்ந்ததால், நமது சமூகம் அதிலிருந்து விடுபட்டுள்ளது/’ எனவும்  பிரதமர் மோடி அந்த காணொளி வாயிலாக தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment