ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனு…! மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயநீதிமன்ற கிளை உத்தரவு…!

தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் தமிழக அரசின் சில அரசாணைகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பின்பாக அரசு புதிய அரசாணைகளை விதித்துள்ளது. இதனையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.