பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு… இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கும் ஐகோர்ட்!

PM Modi : கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறை கூறியதாவது, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை என்றும் பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது.

Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!

மேலும், ஏற்கனவே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததை மேற்கோள்காட்டி  பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வரும் 18ம் தேதி பிரதமர் மோடியின் வருகையின்போது கோவையில் 4 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் பாஜக அனுமதி கோரியிருந்தது.

Read More – தமிழ் பண்பாட்டின் முதல் எதிரி.. திமுக ஒரு அரக்கன்.! பிரதமர் மோடி ஆவேசம்.!

இந்த நிலையில், பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை கூறப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Read More – குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார். தேர்வு நாள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு காரணங்களை காவல்துறை தரப்பில் வாதம் முன்வைத்துள்ளது. இதையடுத்து, பிரதமரின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment