தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரியால் செவித்திறன் இழக்கும் மக்கள் !

துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல் படும் கல்குவாரியல் அப்பகுதி மக்கள் செவித்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் வடகோடி எல்லையில் அமைந்துள்ள  நரசிம்மபுரம், பாறைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயமும் ,கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். இந்த கிராமங்கள் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த நிலையில் சிப்பிப்பாறையை என்ற இடத்தை  சேர்ந்த முருகானந்தம் என்பவர் நரசிம்மபுரத்தில் 2013ம் ஆண்டு ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலப்பகுதியில் குவாரி அமைக்க அனுமதி பெற்றதாகவும், தற்போது விதிகளை மீறி அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குடியிருப்புகளில் இருந்து 1500 மீட்டர் வரை தொலைவில்தான் கல்குவாரி இயங்க வேண்டும் என்பது அரசு விதியாகும். ஆனால், நரசிம்மபுரம் அருகே 750 அடியில் அமைந்துள்ளது.

கல்குவாரியில் வெடி வெடிப்பதால் அனைத்து வீடுகளிலும் கீறல்கள் விழுந்தும், விரிசல் ஏற்பட்டும் காணப்படுகின்றன. வெடிசத்தம் காரணமாக, நரசிம்மபுரம் கிராமத்தில் ஏராளமானோருக்கு செவி கேட்கும் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கல்குவாரிக்கு அருகில் பள்ளி அமைந்துள்ளதால் தங்களது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று ஆசிரியர்கள் வர மறுத்தாக கூறுகின்றனர் மக்கள்.  இந்த கல்குவாரி தற்போது இயக்கவில்லை என்று அரசு அலுவலக கோப்புகளில் இருந்தாலும், மறைமுகமாக வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கல்குவாரி அவசியம் தான். ஆனால் அதைவிட மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் மிக முக்கியம். பள்ளியை திறந்து மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment