கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கட்டபஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

சென்னை காவல் ஆணையராக பதவி வகித்து வந்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அவர்கள் தற்பொழுது பணி மாற்றப்பட்டு, புதிய ஆணையராக சங்கர் ஜிவால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், கொரோனா பரவலை தடுக்க சென்னை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா இல்லையா என்பதை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், கள்ள சந்தைகளில் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பதுடன் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

author avatar
Rebekal