பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.

தமிழக முதல்வராக பதவியெற்ற பின், சென்னை தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், இன்று முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுக்கு அனைத்து பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பெண்களை போல திருநங்கைகளுக்கும் இலவச பச பயண திட்டத்தை அறிவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.