மக்களே உஷாரா இருங்க! 76 ரூபாய் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, ரூ.40,000 – ஐ இழந்த பெண்!

சென்னை சவுகார் பேட்டை நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ப்ரியா அகர்வால்(21) ஒரு கல்லூரி மாணவி ஆவார். இவர் நேற்று காலை மிகுந்த பசியினால், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட, தனது செல்போனில் பிரியாணி கடையை தேடியுள்ளார். அவர் தேடலில் கிடைத்த, வடபழனியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்க முடிவு செய்து, உபர் ஈட்ஸ் என்ற இணையதளம் மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

இதற்காக அவர், ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், பணப்பரிமாற்றம் செய்து சிறிது நேரத்திலேயே, ஆர்டர் கேன்சலாகி விட்டது, இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ப்ரியா, உபர் ஈட்ஸ்-ன் சேவை என்ணை தொடர்பு கொண்டு தனது 76 ரூபாயை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர், 76 ரூபாயை தனியாக திரும்ப தர இயலாது. எனவே ரூ.5,000 செலுத்துங்கள். 5,076 ரூபாயாக திரும்பவும் உங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக தெரிவித்துளளார். இதனை நம்பி, ப்ரியாவும் ரூ.5 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் இருந்து செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக மீண்டும் அந்த இணைய சேவை எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர்கள், பணம் கிரெடிட் ஆகவில்லை. மீண்டும் 5,000 ரூபாய் செலுத்துங்கள் என்று கூற, ப்ரியாவும் மீண்டும் பணத்தை செலுத்தியுள்ளார்.

பணம் வரவில்லை என மீண்டும், மீண்டும் அவர்கள் கூற, தனது வாங்கி கணக்கில் 8 முறை 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார். இப்படியே அனுப்பி அவர் 40 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். அதன் பின் அந்த சேவை எண்ணை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் தான், அவருக்கு தெரிந்துள்ளது இந்த சேவை எண் பொய்யானது என்றும், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்துள்ளார். இதனையடுத்து, ப்ரியா வடபழனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.