பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்!

அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது கட்டமான விமர்சனம்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன், அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது கட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்கு உங்களுக்கு உண்டு எனவும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment