Categories: Uncategory

“பாகிஸ்தான் போடும் திட்டம்” பிரதமரின் உண்மை முகத்தை காட்டுகிறது.பேச்சுவார்த்தை வேண்டாம்..!!

நியூயார்க்கில் அடுத்த வாரம் ஐநா சபைக் கூட்டத்தில் நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான சந்திப்பை மத்தியஅரசு இன்று திடீரென்று ரத்து செய்தது. பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்து 24 மணிநேரத்துக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 3 போலீஸார் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டது, தீவிரவாதி புர்கான் வானிக்கு இஸ்லாமாபாத்தில் தபால் தலை வெளியிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல், உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. சார்க் மாநாட்டையும் இந்தியா புறக்கணித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்தவிதமான பேச்சும் நடக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் எழுதி இருந்தார். அதற்குப் பதில் அளித்து, இம்ரான் கான் எழுதிய கடிதத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாதிகள் பிரச்சினை ஆகியவற்றை பேசித் தீர்க்க வேண்டும். இதற்காக இந்தியா- பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி ஆகியோர் இடையே பேச்சு நடைபெறும் என்று அறிவித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் இரு நாடுகளுக்கு மீண்டும் பேச்சு தொடங்குவது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வீட்டில் இருந்து 3 போலீஸாரை கடத்திச் சென்ற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் அவர்களைக் கொடூரமாக கொலை செய்தனர். இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடக்கும் சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியை பெருமைப்படுத்தி, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அரசு சார்பில் தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.

ஒரு புறம் தீவிரவாதிகள் இந்தியப் போலீஸாரை கடத்திக் கொல்கிறார்கள், மறுபுறம் தீவிரவாதிக்கு தபால்தலை வெளியிட்டு பாகிஸ்தான் பெருமைப்படுத்துகிறது என்று அறிந்த மத்தியஅரசு அடுத்த வாரம் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இன்று அறிவித்தது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் நிருபர்களிடம் டெல்லியில் இன்று கூறியதாவது:

”தீவிரவாதி புர்ஹான் வானியை பெருமைப்படுத்தி தபால் தலை வெளியிட்டது,மறுபுறம் இந்தியப் போலீஸாரை தீவிரவாதிகள் கொலை செய்த நிகழ்வு போன்ற சம்பவங்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உண்மையான முகத்தை வெளிக்காட்டிவிட்டது.

இந்த அமைதிப்பேச்சுத் திட்டத்துக்குப் பின்புலத்தில் இஸ்லாமாபாத்தின் கொடுமையான திட்டம் தெளிவாகிவிட்டது. இந்த மனநிலையில் இருக்கும் போது, இருதரப்பு உறவுகளையும் பாகிஸ்தான் மேம்படுத்தாது.

இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் அமைதிப்பேச்சு நடத்தப்படும் என்று நேற்று அறிவித்து இன்று போலீஸார் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வேதனைப்படுத்துகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இருந்து கடிதமும், அதில் அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். தீவிரவாதம், காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேச சாதகமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று நம்பினோம். ஆனால், இப்போதுதான் பாகிஸ்தானின் உண்மையான மனநிலை என்ன, அவர்களின் திட்டம் என்ன என்று புரிந்துவிட்டது. புதிய பிரதமர் இம்ரான் கானின் முகம் என்ன என்பதை சில மாதங்களுக்குள் உலகிற்குத் தெரிந்துவிட்டது”.இவ்வாறு ராவேஷ் குமார் தெரிவித்தார்.

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

57 mins ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

2 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

2 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago