அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு!

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில்  மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மனு கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில்,  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க உத்தரவிடக் கோரிய இந்த வழக்கில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவசர வழக்காக மாறும் ஜல்லிக்கட்டு.! உச்சநீதிமன்றம் சொல்வதென்ன.?

அது மட்டுமின்றி, நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையை வீடியோ பதிவு செய்து செய்து ஓர் அறிக்கையாக தாக்கல் செய்யவும், அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரையும் முறையாக அழைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மேலும்,  இதைப்போலவே, ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் குறிப்பிடப்பட்டு காளைகள் அவிழ்த்து விட படுகிறது அதற்கு தடை செய்யவேண்டும் என ஒருவர் மனுகொடுத்த வழக்கில்  ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் சொல்லி அவிழ்க்க கூடாது என்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.