பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…! எப்போது..?

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல். 

ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தேனி பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment