ஒரே நாடு! ஒரே சட்டம்! இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – அதிபர் ராஜபக்சே

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

இலங்கையில் கடந்த  நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ராஜபக்க்ஷே புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஆவர், ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.