கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் டோக்கன் – சென்னையில் புதிய முறை!

சென்னை கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது அறநிலையத்துறை.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அதுவும் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகளவில் கொரோனா தாக்கம்  உள்ளது.

தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்கலாம் என அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே சென்னையில் உள்ள பிரதான இந்து கோயில்களுக்குள் சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டமாக வருகை தந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை தடுக்க சென்னை வடபழனி முருகன் கோயில், கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஆகிய மூன்று கோயிலில் நுழைவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டோக்கன் பெற்றே வரவேண்டும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

author avatar
Rebekal