சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ 5 கோடி நிதி! சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முடிவு!

Sekar Babu

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் … Read more

புதுச்சேரி – வழிபாட்டு தலங்களுக்கு இரவு 2 மணி வரை அனுமதி!

புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 2 மணி வரை வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி. புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 2 மணி வரை வழிபாட்டு தலங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே நள்ளிரவு 1 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உ.பி-யில் சட்டவிரோதமாக மதவழிபட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியை அகற்ற உத்தரவு…!

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே மத வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகள் தொடர்ந்து சர்ச்சை பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் … Read more

#Breaking:வார இறுதியில் வழிபாட்டு தலங்கள் மூடலா? – வெளியான தகவல்!

தமிழகத்தில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்க பரிசீலனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி,இரவு நேர ஊரடங்கு,வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, … Read more

அடுத்த வாரத்திலிருந்து தமிழில் அர்ச்சனை- அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த வாரத்திலிருந்து அன்னை தமிழில் அர்ச்சனை என்பது செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக தலைவர்கள் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது அவர்களே இந்து சமய அறநிலைத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை கண்டு பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் விரைவிலேயே தமிழகத்தில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற விளம்பர பலகையுடன் 47 … Read more

தஞ்சை பெரிய கோயில் மூடல் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அதன் காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்போது ஆடி கார்த்திகை வரும் காரணத்தால் பக்தர்கள் கோயில்களுக்கு செல்லக்கூடும் என்பதால் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கோயில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளது. இதில் தஞ்சை … Read more

கொரோனா தொற்று குறைந்ததும் தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என கூறியுள்ளார். சென்னையில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆய்வுப் பணிகளுக்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் வருகை தந்துள்ளார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆய்வு பணிக்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்ததாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் … Read more

கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் டோக்கன் – சென்னையில் புதிய முறை!

சென்னை கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது அறநிலையத்துறை. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அதுவும் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகளவில் கொரோனா தாக்கம்  உள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்கலாம் என அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே சென்னையில் உள்ள பிரதான இந்து கோயில்களுக்குள் சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டமாக வருகை … Read more

#Unlock4: தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களுக்கு அனுமதி.!

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக உத்தரவிட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு … Read more

நாளை முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள  சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதலமைச்சர்

நாளை முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள  சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி நாளை முதல் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.அதாவது,நாளை முதல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சியர்களின் … Read more