அரசு அனுமதியுடன் 5 ஆண்டுகளில் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன – மத்திய அமைச்சர் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக மத்திய சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுப்ரியோ, 2014 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 1.09 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், காட்டு தீயால் அழிந்த மரங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதிகபட்சமாக 2018 – 2019 ஆண்டு காலங்களில் மட்டும் சுமார் 26.91 லட்சம் மரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சட்டங்களுக்கு உட்பட்டு அதிகாரிகளால் இந்த மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மேலும்  2014 – 2015 ஆண்டில் 23.3 லட்சம் மரங்களும், 2015 – 206 ஆண்டில் 16.9 லட்சம் மரங்களும்  , 2016 – 2017 ஆண்டில் 17.1 லட்சம் மரங்களும் , 2018 – 2019 ஆண்டில்  25.5 மரங்களும் வெட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.