‘பயந்து அல்ல’ – மனைவிக்கு மேடையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியை  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இதனை தொடர்ந்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் என் துணைவியாருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கு சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லாரும் மேடையில் சொன்னார்கள் நீங்கள் மட்டும் சொல்லவில்லை என்று வீட்டிற்கு சென்ற பின் கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லாரும் வாழ்த்திய அடிப்படையில் இன்றைக்கு 63வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும்  துணைவியாருக்கும் உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனக் கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.