இந்த ஊரில் மட்டும் 3 நாளில் 4 கோடியை தாண்டிய பிரமாண்ட வசூல்! நேர்கொண்ட பார்வை அப்டேட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்து உள்ளார். இப்படம் பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்க்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படம்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருவதால், நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 4.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் இன்றும் அதிக கூட்டம் இருக்கும் வசூலும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.