மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்..! நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், சூரிய சக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 லிருந்து 12 சதவீதமாகவும், பேனாமை, கத்தி, பிளேடு போன்றவற்றின் ஜிஎஸ்டி வரி 12 இலிருந்து 18 விதமாகவும் சதவீதமாகவும், கிரைண்டர் அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை ஏற்று நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது ஏற்று கொண்டதற்கு நன்றி என்றும், கோயில் நகரமான மதுரை மற்றும் அங்குள்ள மக்கள் சார்பில் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் உயர் அதிகாரிகளை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment