புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படமாட்டாது- எம்.பி கனிமொழி..!

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என எம்.பி  கனிமொழி தெரிவித்தார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாமின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் எம்.பி  கனிமொழி கலந்து கொண்டார். விழாவில் பேசிய எம்.பி  கனிமொழி , ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாமில் 650 பெண்களுக்கு மார்பக பரிசோதனை செய்யப்பட்டு 22 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அப்போது, தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது. தனது கொள்கையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாறமாட்டார். ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும் கனிமொழி எம்.பி கூறினார்.

author avatar
murugan