‘புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலி’ – எல்லோரும் சமம் தானே டீச்சர்..! மாணவனுக்கு பாராட்டு தெரிவித்த திருமாவளவன்..!

பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என திருமாவளவன் ட்வீட். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகின்ற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் முனீஸ்வரனிடம் போனில் சாதி ரீதியாக பேசியுள்ளார்.

இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யும் நானும் இந்த சாதி, ஆனா அந்த பி.டி. டீச்சர் வேற சாதி என கூற அந்த மாணவன் ‘எல்லோரும் சமம்தானே ‘ என பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சாதி குறித்து பேசிய ஆசிரியரிடம், எல்லாரும் சமம் தானே டீச்சர் என பாடம் கற்பித்த மாணவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலிக்கு புரட்சிகர வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment