ஆரோவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டது – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை!

ஆரோவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டது என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பண்பாட்டு நகரத்தில் கிரவுண் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் எதிர்ப்பை மீறி 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை, ஆரோவில் பகுதியில் எந்த காரணத்தைக் கொண்டும் இயற்கை வளங்கள்  அழிக்கப்படாது என்றும், கிரவுண் திட்டத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மரங்கள் வேறு பகுதியில் நாட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal