திமுக ஆட்சியை நாம் தமிழர் கட்சி வழிநடத்துகிறது – சீமான்…!

பெண்களை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்து கொலை செய்யும் குற்றத்திற்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என சீமான் தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில்,  மகாகவி பாரதியாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, அறிக்கை விடுக்கிறதோ அதை பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது. நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி என கூறினார்.

திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்ற பெருமை எனக்கு வந்திருக்கிறது. நாங்கள் ஒரு கோட்பாடு வைத்துள்ளோம். எந்த  குற்றத்திற்கு மரண தண்டனை கிடையாது. ஆனால் பெண்களை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்து கொலை செய்யும் குற்றத்திற்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது இது எங்கள் கோட்பாடு என தெரிவித்தார்.

நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன். பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது அதுதான் தமிழ் தேசியம் என தெரிவித்தார்.

author avatar
murugan