தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம் : தமிழிசை செளந்தரராஜன்

  • தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். 

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுளார். இதனையடுத்து தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 2 பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமே என்றும், வலிமையான பரப்புரையில் பாஜக ஈடுபடும் என்றும், தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment