சத்தமில்லாமல் எதிர் அணியை காலி செய்யும் ஸ்டாலின்: ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் திமுக

  • தேர்தலுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை தூக்கிய பின்னர் தற்போது தேர்தல் சமயத்தில் இராஜதந்திர நகர்த்தலை துவங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்

‘கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால்’

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் தற்போது தமிழகத்தில் இல்லாத வேளைகளில் இதுதான் அரசியல் என முதல் தலைமுறை வாக்காளர்கள் பல எதார்த்தம் இல்லாத நகர்வுகளை பார்த்து தவறான புரிதலில் அரசியலை கற்று வருகின்றனர். ஜெயலலிதா இறந்த பின்னர் நடந்த களேபரங்களுக்கு அடுத்து அதிமுக பல துண்டுகளாக உடைந்தது, குறிப்பாக அந்த கட்சியின் தினகரன் தன் பங்கிற்கு பல சட்டமன்ற உறுப்பினர்களையும் மாவட்ட நிர்வாகிகளையும் தட்டி தூக்கி விட்டு சென்றார்.

‘ஜெயலலிதா இல்லை, கருணாநிதியும் இல்லை’ அறிமுகமில்லாத எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை யார் ஏற்றுக் கொள்வார்கள்? என மக்கள் விழித்திருந்த நேரம், ஒரே ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ”கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால்’‘ இது தான் அந்த குரல்.

அவர் இருந்திருந்தால் இந்நேரம் தனது இராஜதந்திரத்தால் எடப்பாடியின் ஆட்சியை கலைத்து விட்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்பார் என அனைத்து மட்டங்களிலும் பேசப்பட்டது. இதுதான் ஸ்டாலினின் தலைமைப் பண்பையும், அதன் தரத்தையும் கேள்விக்குறியாக்கியது. மக்களும் எதிர்க்கட்சிகளும் பேசிய வேலையில் திமுகவின் ஒரு பக்கம் இருந்தும் ஸ்டாலின் தலைமையில் மீது விமர்சனம் வைத்துக் கொண்டே இருந்தனர்.

‘ஸ்டாலினிடம் கலைஞர் பெற்ற வாக்குறுதி’

 

இந்நிலையில் சமீபத்தில் ஸ்டாலின், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் பல விஷயங்கள் திண்ணமாக தெரிந்தது…

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் பெரும் கலவரம் மூண்டது. ஆட்சிக்கட்டிலில் யார் அமர்வார்கள் என்ற அந்த சண்டையில் அப்போதைய அமைச்சர்கள் ஜானிகிராம்,அரங்கநாயகம், ஆர் எம் வீரப்பன் என பலர் கருணாணநிதி வீட்டு வாசலை தட்டி ஆதரவு கொடுத்தனர். வீடு வந்து வீடு தேடி வந்த அரசாட்சியை வேண்டாம் என்று உதறினார் கருணாநிதி. மேலும் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு என்றும் திமுகழகம் காரணமாக இருக்காது எனவும் அந்த அமைச்சர்களிடம் சொல்லி அனுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்த்து விட்டு திமுகழகம் எப்போதும் ஆட்சியில் அமராது எனவும் விளக்கம் கொடுத்து அனுப்பியுள்ளார் கருணாநிதி.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஸ்டாலினிடம் பல வாக்குறுதிகளை பெற்றுள்ளார் கருணாநிதி. ஜெயலலிதா ஒருவேளை இறந்துவிட்டால் எந்த காரணம் கொண்டும் ஆட்சியை கலைத்துவிட்டு திமுக அதிகாரத்தை கைப்பற்ற கூடாது என ஸ்டாலினிடம் வாக்குறுதியை பெற்றுள்ளார். இது போன்ற பல முக்கியமான விடயங்களை அந்த பேட்டியில் தெரிவித்தார் ஸ்டாலின்.

இதன் பின்னர்தான் ஸ்டாலினின் ஆட்டம் துவங்கியிருக்கிறது. சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தினாலும்... சர்ச்சை வேறு ராஜ்தந்திரம் வேறு என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

தேர்தல் சமயத்தில் அதிருப்தியாளர்கள் கட்சி தாவுவது வழக்கம் தான். ஆனால், தேர்தலுக்கு முன்னரே தனது ஆட்டத்தை துவங்கியுள்ளார் திமுக தலைவர்.

‘அமமுக கூடாரத்தை உடைத்த ஸ்டாலின்’ 

1.செந்தில் பாலாஜி

முதலில் தினகரனின் அமமுகவின் பக்கம் கண் வைத்த அவர், ஜெயலலிதாவின் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கட்டம் கட்டி தூக்கினார். குறிப்பாக செந்தில் பாலாஜி அப்போது தினகரன் கட்சியில் பெரிய பொறுப்பில் இருந்தார். அந்த கட்சியின் அதிகார மையமாகவும் திகழ்ந்தார். அவரை சரியாக பேசி ஸ்கெட்ச் போட்டு தூக்கியதில் ஸ்டாலின் ராஜதந்திரம் துவங்கியது. ஸ்டாலின் செய்த ராஜதந்திர நகர்வுகளில் இதுவே மிகச்சிறந்த நகர்வு என்று பலராலும் பேசப்படுகிறது.

ஏனெனில் கரூரில் தற்போது அதிமுக பலவீனமடைந்துள்ளது. கே சி பழனிச்சாமி தகிடுதத்தம் போட்டு வருகிறார். இந்த நிலையில் கரூரில் திமுகவை வலுப்படுத்த செந்தில் பாலாஜி மிகவும் முக்கியமானவர் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். இதனால் அதிமுகவின் வாக்குகளை திமுகவிற்கு மடைமாற்ற செந்தில்பாலாஜி சரியானவர் என தினகரன் கட்சியில் இருந்து அவரை அள்ளிக் கொண்டு வந்துள்ளார் அவர்.

2.விபி கலைராஜன் 

அதிமுகவின் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன். தினகரன் கட்சியில் இணைந்த பின்னர் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்ததாகவும் கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாகவும் டிடிவி தினகரன் அவரை கட்சியிலிருந்து நீக்கினார். கட்சியில் இருந்து நீக்கிய மறுநாளே ஸ்டாலினை சந்தித்துள்ளார் கலைராஜன்.

இங்குதான் காய்நகர்த்தல் துவங்கியுள்ளது. கலைராஜன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தினகரன் கட்சியில் இருந்து வந்தவர்கள். இருவரும் இணைந்ததால் தினகரன் கட்சியில் இருந்து தங்களது செல்வாக்கை காட்ட இன்னும் பலரை இழுத்து வரக்கூடும். இது ஆர் கே நகர் .தேர்தலின் போது ஓட்டுக்களை பிடித்த தினகரன் கட்சிக்கு விழுந்த பெருத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

 

அதிமுகவில் நேரடியாக கை வைத்த ஸ்டாலின்

 

ராஜ கண்ணப்பன்

அதிமுகவில் இருந்த ஒரு பெரிய கை ராஜ கண்ணப்பன். அதிமுக தலைமை மேலிருந்த அதிருப்தியால் ராஜ கண்ணப்னை தற்போது நகர்த்திக் கொண்டு வந்து திமுகவில் சேர்த்துள்ளார் ஸ்டாலின். ராஜ கண்ணப்பன் ஆனானப்பட்ட சிதம்பரத்தையே கிட்டத்தட்ட தோற்கடித்தவர். 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டார் ராஜ கண்ணப்பன்.

அந்த தேர்தலில் முதலில் ராஜ கண்ணப்பன் வென்று விட்டார் என ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்து வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் கலைராஜன் தோற்று விட்டார் என சர்ச்சைக்குரிய முடிவு அறிவிக்கப்பட்டது .ஆனால் இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால் ஆனானப்பட்ட பா.சிதம்பரத்தையே தகிடுதத்தம் போடவைத்தவர் இந்த ராஜ கண்ணப்பன்.

சிவகங்கை தொகுதியில் இவரது சமூக மக்கள் அதிகம். ஆகவே அந்த தொகுதியை வலுப்படுத்த அவரை அள்ளிவந்து திமுகவில் கோர்த்துள்ளார் ஸ்டாலின். குறிப்பாகராஜ கண்ணப்பன் சிவகங்கை தொகுதியில் நிற்கும் ஹெச்.ராஜாவை தோற்கடிக்க மிகவும் உதவுவார் என்று தெரிகிறது

பதறிப்போன அதிமுக

ஸ்டாலினின் இந்த ராஜதந்திரத்தை எல்லாம் பார்த்த அதிமுக தலைமை உடனடியாக சுதாரித்துக்கொண்டு பெரியகுளம் தொகுதியில் அதிருப்தி வேட்பாளர் முருகனை உடனடியாக மாற்றி உள்ளது. இல்லையெனில் தேனி மற்றும் பெரியகுளம் தொகுதியில் இருந்து இன்னும் சில நிர்வாகிகளை ஸ்டாலின் இழுக்கக்கூடும் என்ற பயம் அதிமுகவை தொற்றியுள்ளது.

வடமாவட்ட பெல்ட் 

நேரடி எதிர்க்கட்சியின் பெரும் புள்ளிகளை காலி செய்த ஸ்டாலின், தற்போது வடக்கு மாவட்டங்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி அதனை பலப்படுத்துகிறார். முதலில் முன்னாள் பாமக நிர்வாகி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவு அளித்தார். தற்போது அதிமுக மற்றும் பாமக கூட்டணியால் அதிலிருக்கும் இன்னும் பல பாமக நிர்வாகிகளை திமுகவின் பக்கம் இழுக்க ஸ்டாலின் காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்த குறிப்பிட்ட சமூகத்தின் சங்க ஆதரவை திமுகவின் பக்கம் திருப்பியிருக்கிறார் ராஜதந்திரி ஸ்டாலின்.

இவ்வாறான காய் நகர்த்தல்களும் ராஜேந்திரனும் திமுகவிற்கு எப்படி உதவும் என இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்

author avatar
Srimahath

Leave a Comment