சசிகலா வருகைக்குப் பிறகும் எனது ஆட்சி நிச்சயம் இருக்கும் – ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிச்சாமி பதிலடி

ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகும் எனது ஆட்சிதான் நடைபெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

நேற்று நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சி மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லிக்கு சென்று இருக்கிறார்.மோடி மற்றும் அமித் ஷாவை பார்த்திருக்கிறார்.விவசாய பிரச்சனைக்காகவா? நீட் பிரச்சினைக்காகவா? சசிகலா விடுதலையாகி வெளியே வரப் போகிறார். அவர் வந்துவிட்டார் என்றால் ஆபத்து வந்துவிடும். அந்த ஆபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான்.நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூட பொறுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது என்று பேசினார்.

இந்நிலையில்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசுகையில், சசிகலா வருகைக்குப் பிறகும் எனது ஆட்சி நிச்சயம் இருக்கும் என்று பேசியுள்ளார்.