என்னுடைய கனவு நனவாகியது! தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த சாந்தனு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்தில், பாக்கியராஜின் மகனான சாந்தனு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லீலா பேலஸில் வைத்து நடைபெற்றது. அப்போது விஜய் அனிருத் மற்றும் சாந்தனுவை மேடைக்கு அழைத்து வாத்தி பாடலுக்கு, அவர்களுடன் இணைந்து  நடனமாடியுள்ளார். இதனையடுத்து சாந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் கனவு நனவாகியது. என்னை மேடைக்கு அழைத்ததாகவும், உங்கள் பாடலுக்கு ஆடலுக்கு வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா.’ என ட்வீட் செய்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.