முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீசார்…! கைது செய்யப்படுவாரா முருகதாஸ்…?

சர்க்கார் படத்திற்கு எதிராக அதிமுகாவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சர்க்காருக்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்ற நிலையில், நேற்று இரவு போலீசார் முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் முருகதாஸ் வீட்டில் இல்லை.

இந்நிலையில், நேற்றிரவு முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீசார் முருகதாஸை கைது செய்யப்போவதாக எழுந்த தகவலையடுத்து, அவரது வீட்டிற்கு, முருகதாஸின் வழக்கறிஞர் ரவி, நடிகர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் நடிகர் ரமேஸ்கண்ணான் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இது முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், போலீசார் தனது வீட்டின் கதவை பலமுறை தட்டியதாக  பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in