கொரோனாவால் பாதிக்கப்படும் வயதானோரை பாதுகாக்க மும்பை மாநகராட்சி அதிரடி திட்டம்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும்.  – மும்பை மாநகராட்சி.

கொரோனாவால் பாதிகப்பட்டத்தில் முமபை மாநகரில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 50 – 60 வயதினர் விகிதமானது அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியானது.

இதனை கண்டுகொண்ட மும்பை மாநகர், புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும்.

ஆனால் மற்ற வயதினருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வது ஒரு வாய்ப்பாக வழங்கப்படும் என மும்பை மாநகர் அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.