கென்யா மாணவி கற்பழிப்பு வழக்கு.! தண்டனையை குறைத்த சென்னை உயர்நீதிமன்றம்.!

கென்யா நாட்டை சேர்ந்த மாணவியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எரிக் முலின் துலியின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த மாணவி மற்றும் எரிக் முலின் துலி என்பவரும் கல்லூரி மேற்படிப்பை கடந்த 2016ஆம் ஆண்டு படித்தனர்.

அப்போது ஒரு நாள், எரிக் முலின் துலி, அந்த மாணவி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அப்பெண்ணை கற்பழித்து, கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

இந்த சம்பவத்தை அறிந்த சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் எரிக் முலின் துலிக் கைது செய்ய பாட்டு அவர் மீது வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், எரிக் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எரிக் மாலிக் தண்டனையை குறைத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றியது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.