முலாயம் சிங் பிறந்த ஊரில் நாளை அவரது இறுதி அஞ்சலி.! வெளியான அதிகாரபூர்வ் தகவல்.!

முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் நாளை (11.10.2022) மாலை 3மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என சமாஜ்வாதி கட்சி டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்க இரங்கலை தெரிவித்தனர். இவரது மறைவை அடுத்து 3 நாட்கள் உத்திரபிரதேச அரசு துக்கம் அனுசரிக்கும் எனவும், அரசு மரியாதையுடன்  முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கு நடைபெறும் எனவும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

தற்போது, சமாஜ்வாதி கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதி சடங்கு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் நாளை (11.10.2022) மாலை 3மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment