MP பதவியை ராஜினாமா செய்கிறார் மனோகர் பாரிக்கர்..,

பனாஜி சட்டமன்ற தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிரிஷ் சோடான்கரை, 4,803 வாக்குகள் வித்தியாசத்தில் மனோகர் பாரிக்கர் தோற்கடித்து வெற்றிக் கனியை பறித்துள்ளார். மனோகர் பாரிக்கருக்கு 9,862 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 5,059 வாக்குகளும் விழுந்தன. வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் பாரிக்கர், மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்துள்ளனர். 

33 சதவீதம் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். MLA-வாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து விரைவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார். இடைத்தேர்தல் நடைபெற்ற மற்றொரு தொகுதியான வல்போயிலும் பாரதிய ஜனதாவை வெற்றி பெற கூடிய வகையில் முன்னிலை வகிக்கிறது. இவர் காங்கிரஸ் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனதாவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பாரிக்கரின் வெற்றியை அடுத்து கோவாவில் பாரதிய ஜனதாவின் ஆயுள் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா அங்கு ஆட்சியமைத்தது. இதனையடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். பாரிக்கர் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், பனாஜி தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ பாரிக்கருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கும், வால்பொய் தொகுதிக்கும் கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

author avatar
Castro Murugan

Leave a Comment