ரத்தம் தெறிக்கும் புதிய பட டைட்டில் வீடியோ இதோ.! விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ்.!

முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் காடன், எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாகி வருகின்றன. 

இன்று தனது புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு மோகன் தாஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வீடியோ ஆரம்பிக்கும் போது மகாத்மா காந்தி கூறிய வாக்கியம் போடப்படுகிறது. பின்னர் விஷ்ணு விஷால் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கொலை செய்து ரத்த கறை படிந்த டிஷர்ட் உடனும், ரத்தம் வழியும் சுத்தியலுடனும் இருக்கிறார். பின்னர் ரத்தம் தெறிக்க மோகன் தாஸ் என எழுதப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் முழு பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.