நடமாடும் ஏடிஎம் : கோவையில் அசத்தும் HDFC வங்கி.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற யாரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதில் வங்கிகள் மட்டும் ஒரு சில இடத்தில் திறந்திருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. சமூக விலைகளை பின்பற்றி வரும் நிலையில், மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் செலவுக்கு தங்களது வங்கியில் இருந்து பணங்கள் எடுப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஒரு சில வங்கிகள் மும்பை, புனே போன்ற இடங்களில் நடமாடும் ஏடிஎம் மையத்தை (mobileatm) உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக்தில் கோவை மாவட்டத்தில் hdfc வங்கி நடமாடும் ஏடிஎம் மையத்தை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் சமூக விலகலை பின்பற்ற முடியும் என்றும் வீடு வீடாக சென்று பணம் தேவைப்படும் நபர்களுக்கு இந்த நடமாடும் ஏடிஎம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்