கருணாநிதியின் தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி  இயற்கை எய்தினார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை  செலுத்தினார். கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்