கொரோனா பற்றி தவறான தகவல்கள்…இந்தியா முதலிடம்..!

இந்தியாவில் சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பாக அதிகமாக வதந்திகள் பரவியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

138 நாடுகளில் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 138 நாடுகளில் பரவிய 9,657 வதந்திகள் குறித்து 94 அமைப்புகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில் இருந்து மட்டும் (18.07 சதவீதம்) சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 9.74 சதவீதமும், பிரேசில் 8.57 சதவீதமும், ஸ்பெயின் 8.03 சதவீதம்  வதந்திகளை பரப்பியுள்ளன.

84% வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவியதாகவும், பேஸ்புக் மூலமாக மட்டும் சுமார் 66.87 சதவிகிதம் தவறான தகவல் பரவப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. அதிக இன்டர்நெட் வசதி, இன்டர்நெட் பற்றிய குறைவான அறிவு ஆகிய காரணங்களால் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து குறித்து WHO எச்சரித்துள்ளது:

முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக எச்சரித்திருந்தது. சமூக ஊடகங்களில் பெறப்பட்ட தகவல்களை நம்பகமான ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கவும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதுவரை உலகம் முழுவதும் சுமார் 22.58 கோடி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 46.49 லட்சம் பேர் இறந்துள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், 4.13 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.64 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா இந்தியாவில் இதுவரை 3.33 கோடி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan