நள்ளிரவில் மின் அலுவலகங்களில் திடீர் விசிட் அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…!

சென்னையில் அவ்வப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் மின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.

சென்னையில் அவ்வப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவகத்திற்கு, நேற்று இரவு 11 மணியளவில் சென்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கட்டுப்பாட்டு அறையில் நிகழும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடத்தில் இருந்து வந்த அழைப்பு ஒன்றை எடுத்த அமைச்சர், அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளிடம் கூறினார். அதனை தொடர்ந்து வடசென்னை பகுதிக்கு உட்பட்ட, குறுக்குப்பேட்டை துணைமின் அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு அமைச்சரின் வருகையை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி வந்ததை கண்டு திக்குமுக்காடினார். அப்போது, அங்கு குடிபோதையில் இருந்த ஜெகன் என்ற ஊழியரை பணியிடைநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார். பின் தண்டையார் பேட்டை நகருக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிந்த அமைச்சர், அங்கு மின் இணைப்பு சரி செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புகார்களை மெத்தனமாக கையாண்ட அதிகாரிகள் மீதி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.