படப்பிடிப்பில் இயக்குனர் சேரனுக்கு தலையில் காயம்.!

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்த போது சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்தி, சேரன் ஆகியோர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில்விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது, திண்டுக்கல்லில் உள்ள  ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

உண்டடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு, எட்டு தையல்கள் போடப்பட்டன. சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பினர். இதனை தொடர்ந்து இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.