பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம்! எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக!

பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம்.

பாஜக சார்பில், நவ.6-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா’ என்ற வரிகள் தொனிக்க, இதில் பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர் புகைபபடம் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறுகையில், ‘அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால், பிற காட்சிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறுகையில், பிரதமர் மோடி, எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து, மக்களிடம் ஆதரவு பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.