Categories: இந்தியா

MeToo-வில் சிக்கும் முதல்வர்…எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி…!!

‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள் என்றும் குமார் பங்காரப்பா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
பா.ஜனதா கட்சியை சேர்ந்த குமார் பங்காரப்பா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீடூ‘ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் பொருந்தும். இந்த ‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள். முதல்-மந்திரி குமாரசாமி பொய் பேசுகிறார். அவர் உணர்வுப்பூர்வமாக பேசி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களை ஏமாற்றுகிறார்.
சிவமொக்காவுக்கு வரும்போது மட்டும் குமாரசாமி, பங்காரப்பாவின் பெயரை பயன்படுத்தி உணர்ச்சிப்பூர்வமாக பேசுகிறார். பங்காரப்பா காவிரி நீருக்காக போராடினார். அவரது பெயரை மண்டியா, ராமநகரில் ஏன் பயன்படுத்துவது இல்லை. ராமநகரில், உங்கள் வீட்டு பிள்ளை என்று மனைவிக்காக குமாரசாமி பிரசாரம் செய்கிறார். அங்கு பங்காரப்பா என்று பெயரை சொல்லி ஓட்டு கேளுங்கள் பார்ப்போம்.
மண்டியாவில் பேசும்போது கண்ணீர் விடும் குமாரசாமி, இங்கு வந்து பங்காரப்பாவுக்கு பா.ஜனதா அநீதி இழைத்துவிட்டதாக கூறுகிறார். மது பங்காரப்பாவை வெற்றி பெற செய்தால், அவரை மந்திரியாக்குவதாக குமாரசாமி பொய்யான வாக்குறுதியை வாக்காளர்களிடம் கூறுகிறார். இவ்வாறு பேசி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, சிவமொக்காவுக்கு எவ்வளவு நிதி கொடுப்பீர்கள் என்று குமாரசாமி சொல்ல வேண்டும்.பெரிய தலைவரின் மகன் என்று சொல்லிக்கொண்டு மது பங்காரப்பா சுற்றுகிறார். ஆனால் பங்காரப்பாவின் நினைவகம் அமைக்க அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
பா.ஜனதா சார்பில் நினைவகம் அமைப்பதற்காக நாங்கள் முயற்சி எடுத்தோம். கடந்த நாடாளுமன்ற பொதுதேர்தலின்போது, கீதா சிவராஜ்குமாரை குமாரசாமி அழைத்து வந்து சிவமொக்கா தொகுதியில் நிறுத்தினார். இப்போது அவர் எங்கே போனார்?. வெளிநாட்டில் இருந்த மது பங்காரப்பாவை திடீரென அழைத்து வந்து சிவமொக்கா இடைத்தேர்தலில் குமாரசாமி நிறுத்தியுள்ளார் என்று குமார் பங்காரப்பா கூறினார்.
dinasuvadu.com

Dinasuvadu desk

Recent Posts

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

3 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

4 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

4 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

4 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

4 hours ago